• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் நாணய செயற்பாட்டினை மறுசீரமைத்தல்
- இலங்கைக்குள் நாணய சுற்றோட்டத்தில் அதிகரித்துவரும் போக்குகள் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் நடைமுறையிலுள்ள நாணய செய்முறை ஆற்றலை மறுசீரமைத்தல் அவசியமென கண்டறியப் பட்டுள்ளது. ஆதலால், இந்த நோக்கம் கருதி நடைமுறைப்படுத்தப்படும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியில் நாணய செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.