• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான வீடமைப்பு அபிவிருத்தி
- அம்பாந்தோட்டை மக்கள் செறிவு கூடிய, முறையான துப்பரவேற்பாட்டு வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்குத் தேவையான இடவசதி இல்லாத கடற்றொழிலாளர்கள் வசிக்கும் பிரதேசங்களில் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் இனங் காணப்பட்டுள்ள கொஹொலன்கல பிரதேசத்திலிருந்து 7 ஏக்கரும் தங்கலை பிரதேசத்திலிருந்து 60 பேர்ச்சர்ஸ்சும் கொண்ட நிலப்பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 310 வீடுகளும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 56 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த கருத்திட்டம் சார்பில் கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.