• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி வௌ்ளப் பெருக்கு தடுப்பு சுவரின் முதற்கட்ட விரிவான பொறியியல் வடிவமைப்புகளுக்குத் தேவையான புவியியல் ஆய்வுகளை மேற்கொள்தல்
- களனி கங்கை ஆற்றுப்படுகை சார்ந்த வௌ்ளப்பெருக்கு நிலைமையை குறைக்கும் பொருட்டு காலநிலை பாதிப்புகளை குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் உத்தேச களனி வௌ்ளப்பெருக்கு தடுப்பு சுவரின் முதற்கட்ட விரிவான பொறியியல் வடிவமைப்புகளுக்குத் தேவையான புவியியல் ஆய்வுப் பணிகளை தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக துரிதமாக நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.