• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவளங்கள் அபிவிருத்தி கருத்திட்டம்
- நாட்டின் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் உயர் கல்வி வாய்ப்பினை விரிவுபடுத்தும் நோக்கில் களனி பல்கலைக்கழகம், இலங்கை ரஜரட்டை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தொழினுட்ப பீடங்களை தாபிப்பதற்கும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றை தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி ஆண்டொன்றில் 830 மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு உரியதாகும். 26,400 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத் தொகுதி அடங்கலாக வசதிகளை வழங்கும் பொருட்டு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவளங்கள் அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.