• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் கருத்திட்டம்
- அண்மைக் காலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு, இந்த நிலச்சரிவு காரணமாக உயிர் மற்றும் சொத்துக்கள் சேதமடைவதோடு பொருளாதார மற்றும் சமூக நலனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினை தடுப்பதற்கு குறுகிய கால சில நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டபோதிலும், இதன் பொருட்டு நிரந்தரமாக தவிர்க்கும் திறமுறைகள் ஊடாக நிலச்சரிவு அபாயத்தை குறைப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் கூடிய நிலச்சரிவு ஆபத்து மிக்க 27 ஸ்தானங்களும் இரண்டாம் கட்டத்தின் கீழ் மலைநாட்டு புகையிரத வீதி அமைந்துள்ள ஆபத்துமிக்க 20 ஸ்தானங்கள் அடங்கலாக ஆகக் கூடிய நிலச்சரிவு ஆபத்துமிக்க 120 ஸ்தானங்களும் தழுவப்படவுள்ளது. 110 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.