• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அரசாங்கத்தின் வரிசை போதனா வைத்தியசாலையொன்றாக நடாத்திச் செல்லுதல்
- மக்கள் செறிவுமிக்க கிழக்கு கொழும்பு, கடுவெல மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களின் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் பொருட்டு மருத்துவர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைப் போன்று அரசாங்க வரிசை போதனா வைத்தியசாலையொன்றாக தேவையான சகல வசதிகளுடன் நடாத்திச் செல்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கொழும்பு கிழக்கு ஆதார வைத்திசாலைக்கு (முல்லேரியா வைத்தியசாலை) ஒருங்கிணைவாக கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையொன்றாக மருத்துவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை நடாத்திச் செல்லும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.