• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இயந்திரங்களின் இயக்க காலத்திற்கு அமைவாக செய்யப்படவேண்டிய பிரதான பாரிய பழுதுபார்ப்புகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்தல்
- சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 5-8 வரையான இலக்க இயந்திரங்களினது 12,000 மணித்தியால இயக்க காலத்தின் பின்னரும் அத்துடன் 9-12 வரையான இலக்க இயந்திரங்களினது 6,000 மணித்தியால இயக்க காலத்தின் பின்னரும் பாரிய பழுதுபார்த்தல்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. இதற்கிணங்க உரிய இயக்க மணித்தியாலங்களின் பின்னர் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டிய பழுதுபார்த்தல்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த இயந்திரங்களின் ஆரம்ப உற்பத்தியாளர்களான ஜேர்மனியின் M/s MAN Energy Solutions SE நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.