• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த மின் நிலையத்திற்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு
- சப்புகஸ்கந்த Pielstick மின் நிலையம் சார்பில் 800,000 லீட்டர் Taro 40XL 40 வகை உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு செய்வதற்கும் சப்புகஸ்கந்த MAN மின் நிலையம் சார்பில் 300,000 லீட்டர் Taro 40XL 40 வகை உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு செய்வதற்குமான கேள்விகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Chevron Lubricants Lanka PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.