• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சாரசபையின் Barge Mounted மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு
- இலங்கை மின்சாரசபையின் Barge Mounted மின் உற்பத்தி நிலையத்திற்கு 2018 / 2019 ஆம் ஆண்டு சார்பில் தேவையான 750,000 சிலின்டர் உராய்வு நீக்கி எண்ணெய் விநியோகிப்பதற்கும் 175,000 சிஸ்டம் உராய்வு நீக்கி எண்ணெய் விநியோகிப்பதற்குமான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Chevron Lubricants Lanka PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.