• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அங்கொடை தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் வௌிநோயாளர் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்க பிரிவு, காவறைத்தொகுதி என்பன சார்பில் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பெறுகை
- தொற்று நோய்களுக்கான சிகிச்சை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளை மேற்கொள்ளும் சிறப்பு நிலையமொன்றாக அங்கொடை தேசிய தொற்றுநோய் நிறுவகத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் கீழ் வௌிநோயாளர் பிரிவு, ஆய்வுகூடம், காவறைத்தொகுதி, கதிரியக்க நோய் நிர்ணய வசதிகளுடன்கூடிய உயர் தரம்வாய்ந்த சுகாதார சேவை நிலையமொன்றாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக, அங்கொடை தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் வௌிநோயாளர் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்க பிரிவு, காவறைத்தொகுதி என்பன சார்பில் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பெறுகையை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் M/s.George Steuart Engineering (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.