• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Litro Gas Lanka Ltd., நிறுவனத்திற்கு 2019 / 2020 ஆம் ஆண்டுக்கான திரவ பெற்றோலிய வாயு வழங்கல் சம்பந்தமான ஒப்பந்தத்தை வழங்குதல்
- நாட்டில் திரவப் பெற்றோலிய சந்தையின் 70 சதவீதமான பங்கினைக் கொண்டுள்ள Litro Gas Lanka Ltd., நிறுவனம் திரவ பெற்றோலிய வாயு இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், நிரப்புதல், நாடு முழுவதிலும் சந்தைப்படுத்தல் உட்பட விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க கம்பனியொன்றாகும். நாட்டின் சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த நிறுவனத்திற்கு திரவப் பொற்றோலிய வாயு 350,000 மெற்றிக் தொன் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s.Oman Trading International Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.