• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வீடமைப்பு கொள்கை
- தற்போது அமுலிலுள்ள தேசிய வீடமைப்பு கொள்கையை தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கு வௌித் தெரியும் விதத்திலும் நகர மயப்படுத்தல் இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பு மற்றும் நிரந்தர மனித குடியேற்ற அபிவிருத்தி நோக்கத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற பிரச்சினைகளின்பால் கூடிய கவனம் செலுத்தியும் திருத்துவதற்காக ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது அமைச்சுக்களின் விடய நோக்கெல்லைகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு திருத்தியமைக்கப்பட்ட தேசிய வீடமைப்பு கொள்கை தொடர்பில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.