• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குண்டசாலை இலங்கை விலங்கு வளர்ப்பு கல்லூரியின் மூலம் நடாத்தப்படும் டிப்ளோமா பாடநெறி சார்பில் தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) 5 மற்றும் 6 மட்டங்கள் வரை தரமுயர்த்துதல்
- தொழினுட்ப பாடநெறிகள் சகலவற்றுக்கும் 2020 ஆம் ஆண்டளவில் தேசிய தொழிற்பயிற்சி தகைமையினை பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகை யினால் விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் நடாத்தப்படும் இரண்டு (02) வருட விலங்கு வளர்ப்பு டிப்ளோமா பாடநெறியினை தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) 5 மற்றும் 6 மட்டமாக தரமுயர்த்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இந்த பாடநெறியின் விடய பரப்பை அபிவிருத்தி செய்தல், கற்பித்தல் மற்றும் பயிற்சி ஒப்படைகளை அபிவிருத்தி செய்தல், தேசிய போட்டி தர அபிவிருத்தி போன்ற சகல தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன இந்த பாடநெறியானது இரண்டரை வருடகால கால்நடை வளர்ப்பு உற்பத்தி தொழினுட்ப தேசிய உயர் டிப்ளோமா என இற்றைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக, இந்தப் பணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இலொக்ரோனிக் கல்வி வசதிகளைத் தாபித்தல், பயிற்சி பெறும் பண்ணைகளையும் உட்கட்டமை்பபு வசதிகளையும் விருத்தி செய்தல். போன்றவற்றுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.