• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரிகள் தொடர்பில் இலங்கைக்கும் உக்ரேனுக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை
- இலங்கைக்கும் உக்ரேனுக்கும் இடையில் பொருளாதார உறவுகளை விருத்தி செய்யும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒருங்கிணைவாக இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடை செய்வதற்குமாக ஏற்கனவே உத்தியோகத்தர்கள் மட்டத்தில் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையினை அரசாங்க மட்டத்தில் செய்துகொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.