• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவனத்தின் இடவசதியினை விரிவுப்படுத்துவதற்காக காணியொன்றை வழங்குதல்
- 1951 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவனம் தற்போது மோட்டார் வாகன பொறியியல் மற்றும் அது சார்ந்த துறைகளின் முழுநேர 11 பயிற்சி பாடநெறிகளை நடாத்துவதோடு, வருடாந்தம் சுமார் 600 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இவற்றுக்கு மேலதிகமாக 42 குறுகிய கால பாடநெறிகளையும் நடாத்திச்செல்வதோடு, நிறுவனத்தில் சுமார் 2,000 முழுநேர பயிலுநர்களும் 2,500 இற்கு மேற்பட்ட பகுதிநேர பயிலுநர்களும் பயிற்சி பெறுகின்றனர். தற்போது சுமார் 13 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியில் இந்த நிறுவனம் நடாத்திச் செல்லப்படுவதோடு, இந்த நிறுவனத்தின் பணிகளை மேலும் விரிவுப்படுத்தி புதிய வேலைத்தளங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆய்வுகூடங்கள் போன்றவற்றை நிர்மாணித்து வருடாந்தம் மேலும் சுமார் 150 பயிலுநர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இந்த நிறுவனத்திற்கு அடுத்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 04 ஏக்கர் 15.5 பேர்ச்சஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.