• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"போதைப் பொருளற்ற நாடு" என்னும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- பொருளாதார மற்றும் சமூக ரீதியில் சமூகத்தின் நல்வாழ்க்கையின்பால் போதைப் பொருள் பிரச்சினையானது பிரதிகூலமான விதத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. போதைப் பொருள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வினை வழங்கும் பொருட்டு தேசிய போதைப் பொருள் ஒழிப்பு கொள்கை மற்றும் செயற்பாட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, போதைப் பொருளற்ற தேசத்தை உருவாக்குவதற்காக போதைப் பொருள் ஒழிப்பு சனாதிபதி செயலணியின் ஒருங்கிணைப்புடனும் இலங்கை பொலிஸ், அபாயகர ஔடத கட்டுப்பாட்டு தேசிய சபை மற்றும் உரிய ஏனைய நிறுவனங்கள் என்பவற்றின் பங்களிப்புடனும் போதைப் பொருளற்ற நாடு என்னும் நிகழ்ச்சித்திட்டமானது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. போதைப் பொருளற்ற நாடொன்றை உருவாக்கும் பணிகளை மேலும் விரிவுப்படுத்துவதற்காக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகாரசபையொன்றை தாபிப்பதற்கும் நச்சு போதைப் பொருள்களை கண்டறியும் புதிய தொழினுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.