• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிதாக களஞ்சியசாலைகளை நிர்மாணித்தலும் ஏற்கனவேயுள்ள களஞ்சியசாலைகளை பழுதுபார்த்தலும்
- கமத்தொழில் துறையை விருத்தி செய்து விவசாயிகளுக்கு சலுகை வழங்குவதற்காக இந்த துறைசார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, பெலியத்த, மீகஹஜந்துர ஆகிய பிரதேசங்களில் 2,000 மெற்றிக்தொன் கொள்ளளவினைக் கொண்ட நவீன தொழினுட்பத்துடன் கூடிய புதிய இரண்டு களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பதற்கும் நாடு முழுவதிலுமுள்ள பழைய 39 நெற் களஞ்சியசாலைகளை பழுதுபார்ப்பதற்குமாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.