• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண - பாதுக்க மற்றும் ஹபரனை - வாழைச்சேனை மின் செலுத்துகை வலையமைப்பை விருத்தி செய்தல்
- இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் செலுத்துகை வலையமைப்பை பலப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஹொரண - பாதுக்க 25 கி.மீ மின் செலுத்துகை வழியினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தையும் ஹபரனை - வாழைச்சேனை மின் செலுத்துகை கம்பி தொகுதியின் 2 ஆம் சுற்றின் கம்பிகளை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தையும் M/s.China National Electric Engineering Co,Ltd., கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.