• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமையளிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்தி அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக இந்த பிரதேசத்திலுள்ள வீதி முறைமைகளை மறுசீரமைப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான வீதி புனரமைப்பு ஒப்பந்தத்தை CEC - NEM கூட்டுத் தொழில்முயற்சிக்கும் வட மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான வீதி புனரமைப்பு ஒப்பந்தத்தை M/s.KDE Weerasinghe & Co. Pvt. Ltd., கம்பனிக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள வீதி அபிவிருத்திக்கு அதிகாரசபைக்குச் சொந்தமான வீதி புனரமைப்பு ஒப்பந்தத்தை Consulting Engineers & Contractors Pvt. Ltd., கம்பனிக்கும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான வீதி புனரமைப்பு ஒப்பந்தத்தை Nawaloka Construction Company Pvt. Ltd., கம்பனிக்கும் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான வீதி புனரமைப்பு ஒப்பந்தத்தை M/s.Sinohydro Corporation Limited கம்பனிக்கும் வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.