• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
- விமான சேவை நடவடிக்கைகள் சம்பந்தமாக சருவதேச ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஆப்கானிஸ்தான், கட்டார் இராச்சியம், இஸ்ரேல் மற்றும் சிம்பாபே ஆகிய அரசாங்கங்களுடன் இலங்கை சார்பில் உத்தியோகத்தர்கள் மட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ள விமான சேவைகள் உடன்படிக்கைகளை அதிகாரம் பெற்ற பிரதிநிதியொருவரினால் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர், இலங்கையின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு பங்களிப்பு நல்கக்கூடிய விதத்தில் இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்து வதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது