• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மட்டத்தில் பகுப்பாய்வு ஆய்வுகூடமொன்றை தாபிப்பதன் மூலம் உணவு பாதுகாப்பினை மேம்படுத்துதல்
- இரசாயன பசளை, சேதன பசளை மற்றும் கிருமிநாசினிகள் போன்றவை இடப்படும் அளவு மற்றும் மேலதிக பாவனை என்பவற்றை ஒழுங்குறுத்துவதற்கும் உணவு, மண், நீர் என்பவற்றில் மீதமாகும் அத்துடன் தூய்மைக்கேடு அளவுகளை ஒழுங்குறுத்து வதற்கும் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடமொன்றை தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக ஆய்வுகூட உபகரணங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் அதன் பகுப்பாய்வு ஆற்றலை மேம்படுத்துவதற்கும், ஆய்வுகூட அங்கீகரிப்பு மற்றும் தர உறுதிப்படுத்தல்களை மேற்கொள்வதற்கும், கமத்தொழில் சார்பில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் சரியான பாவனை பற்றி அறிவூட்டுவதற்கும் கமத்தொழில் இரசாயனப் பொருட்கள், பசளை பாவனை உட்பட விநியோகம் தொடர்பில் பயிற்சியினை வழங்குவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இதன் பொருட்டு தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.