• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு சட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் பொறிமுறையை பலப்படுத்தல்
- இலங்கையில் கிருமிநாசினி பாவனையை ஒழுங்குறுத்தும் கட்டுப்பாட்டு பணியானது 1994 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க மற்றும் 2011 ஆம் ஆண்டின் 31 ஆம் சட்டங்களினால் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சட்டம் அமுலுக்கு வந்த 1983 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்த சுமார் 70 வரையான கிருமிநாசினி உற்பத்திகள் தற்போது சுமார் 700 வரை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதேபோன்று கிருமிநாசினி கைத்தொழிலில் உலகளாவிய மட்டத்தில் நிகழ்ந்துள்ள போக்கு மற்றும் அபிவிருத்திக்கு ஒருங்கிணைவாக கிருமிநாசினி கட்டுப்பாட்டு நடவடிக்கை களையும் இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க கிருமிநாசினி ஆக்கக்கூறுகளின் தரத்தினை பாதுகாத்தல், உணவு பயிர்களில் மீதமாகும் கிருமிநாசினிகளின் ஒழுங்குறுத்துகையின் கட்டாய இசைவாக்க மதிப்பீட்டு செயற்பாட்டினை பலப்படுத்துதல், உள்நாட்டு உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பயிர்களில் மீதமாகும் கிருமிநாசினிகளிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கு சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இசைவாக்க பகுப்பாய்வு வசதிகளை விரிவுபடுத்துதல், உலகளாவிய கமத்தொழில் உற்பத்திகளின் போக்கு மற்றும் நலன்மிக்க கமத்தொழில் முறைகளை நாட்டினுள் பிரபல்யப்படுத்துதல், கமத்தொழில் துறையில் கிருமிநாசினி மாத்திரமன்றி அது தொடர்புபட்ட ஏனைய துறைகளையும் தழுவும் விதத்தில் ஒழுங்குறுத்துகை துறையை விரிவுபடுத்துதல் அத்துடன் ஒழுங்குறுத்துகை பணிகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்குத் தேவையான தரவுமுறைகளை கட்டியெழுப்புதல், நிருவாக கட்டமைப்புகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.