• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகை பொருட்கள் விநியோக முறைமையினை நவீனமயப்படுத்துதல்
- நெல் மேலதிக உணவுப்பயிர் மற்றும் மரக்கறி போன்றவற்றின் சான்றுபடுத்தப்பட்ட விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் 27 விதை பண்ணைகளின் மூலமும் ஒப்பந்த அடிப்படையில் விதை உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமும் வழங்கப்படுகின்றது. இந்த விதை பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி செயற்பாடுகளுக்குத் தேவையான உரிய நீர்ப்பாசன வசதிகள் இல்லாமை, இயந்திர மயப்படுத்தப்படாமை, களஞ்சிய வசதிகள் போதுமானதாக இல்லாமை, சீரற்ற போக்குவரத்து வசதிகள் மற்றும் அத்தியாவசிய வசதிகள் கட்டமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளமை என்பன காரணமாக அடிப்படை விதை தேவைக்கான குறியிலக்குகளை பூர்த்தி செய்வது கடினமாகியுள்ளது. ஆதலால், விதை பதனிடலை இயந்திரமயப்படுத்தல் மஹஇலுப்பள்ளம, அம்பாறை மற்றும் அளுத்தரம பண்ணைகளில் ஒன்றிணைந்த உலர்த்தும் மற்றும் பதனிடல் தொகுதிகளை நிருமாணித்தல், பெல்வெஹர மற்றும் பட்டஅத்த பண்ணைகள் சார்பில் மேலதிக உணவுப் பயிர் விதைகளை தெரிவுசெய்வதற்கு புதிய தொழினுட்ப இயந்திரங்களை கொள்வனவு செய்தல், ரஹங்கல, சீத்தாஎலிய, பட்டஅத்த மற்றும் அம்பாறை பண்ணைகளில் நான்கு களஞ்சியங்களை நிருமாணித்தல் மற்றும் விதை மற்றும் நடுகைப் பொருட்டுகள் அபிவிருத்தி நிலையங்களின் போக்குவரத்து முறைமையினை விருத்தி செய்தல், லக் கமத்தொழில் வர்த்தக வலயமைப்பை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 335 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.