• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை மற்றும் தெங்கு சார்ந்த சிறுதோட்ட துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்குதல்
- சிறிய தேயிலைத் தோட்டத்துறையும் மற்றும் தென்னந்தோட்டத்துறையும் இந்த துறைசார்ந்த மொத்த உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பு கடந்த சில வருடங்களில் அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பங்களிப்பினை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் நிலவுகின்றமை பற்றியும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிறிய தேயிலைத் தோட்டங்களினதும் தென்னந்தோட்டங்களினதும் உற்பத்தியின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான நிதியினை குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.