• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி பல்மாதிரி போக்குவரத்து முனைவிடத்தினை நிர்மாணிப்பதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
- திறமுறை நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் கண்டி பல்மாதிரி போக்குவரத்து முனைவிடத்தினை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. 11,700 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் செயற்படுத்தப்படும் இந்தக் கருத்திட்டத்தின் மூலம் கண்டி நகரத்தில் வசிக்கும் பொதுமக்களினதும் அதன் கலாசார மரபுரிமையினதும் தரத்தினை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு நல்கக்கூடிய சுற்றாடல் நட்புறவுமிக்க போக்குவரத்து முறைமையொன்றைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் காரணமாக இந்த பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 820 வர்த்தகர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரம் இல்லாமல் போகுமென கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகையினை கணக்கிடுவதற்காக நியமிக்கப்பட்ட உரித்து மதிப்பீ்ட்டு குழுவின் சிபாரிசுக்கு அமைவாக உரிய நட்டஈட்டினை செலுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.