• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய வர்த்தக விமான சேவைகளை செயற்படுத்துவதற்காக பலாலி (காங்கேசன்துறை) விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
- சுற்றுலா தொழிலின் மேம்பாட்டிற்காக உள்ளக வர்த்தக விமான சேவைகளை செயற்படுத்தும் பொருட்டு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கால அட்டவணைக்கு அமைவாக உள்ளக வர்த்தக பயணிகள் விமான சேவையினை செயற்படுத்துவதற்காக பலாலி விமான நிலையத்தின் தேவையான அபிவிருத்தி பணிகளை 1950 மில்லியன் ரூபா முதலீட்டில் இலங்கை விமானப்படையின் ஊடாக துரிதமாக மேற்கொள்வதற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.