• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெட்டுமர உற்பத்திக்கென வனச் செய்கையை ஆரம்பித்தல்
- இலங்கையில் மரத்தேவை வருடாந்தம் அதிகரித்து வருகின்றமையினால் அதற்கு ஒருங்கிணைவாக வெட்டுமரங்களுக்காக தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள வனச் செய்கைகளின் பயனை அதிகரிப்பதற்கும், புதிய வனச் செய்கைகளை ஆரம்பிப்பதற்குமாக வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 500 ஹெக்டாயர் காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலின் மூலம் வெட்டுமரத்திற்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்கு மேலதிகமாக பிரதேச ரீதியில் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வன அளவினை அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பினை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.