• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர் வழிகளின் ஊடாக கடற்கரை மற்றும் சமுத்திரத்தில் ஒன்றுசேரும் கழிவுகளின் அளவினைக் கட்டுப்படுத்துதல்
- கடற்கரையிலும் கடலிலும் ஒன்றுசேரும் கழிவுகளில் 90 சதவீதமானவை நிலப்பிரதேசத்தில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கைத்தொழில் என்பன காரணமாக உருவாகுவது அவதானிக்கப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக சமூக, பொருளாதார, சுற்றாடல் பிரச்சினைகள் பல ஏற்பட்டுள்ளன. கடற்கரையின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச தரமாக கருதப்படும் டென்மார்க் சுற்றாடல் கல்வி பற்றிய மன்றத்தின் ஊடாக வழங்கப்படும் "நீல கொடி" சான்றிதழை இலங்கை கரையோரத்திற்குரியதாக பெற்றுக் கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போன்று நாட்டின் சுற்றுலா தொழிலுக்கு கரையோரம் மற்றும் கடல் சார்ந்த பிரதேசங்கள் மூலம் சுமார் 70 சதவீத பங்களிப்பு வழங்கப்படுகின்றமையினால் உலகின் சிறந்த சுற்றுலா பிரதேசமாக இலங்கைக்கு உரியதாகவுள்ள இடத்தை பாதுகாத்து 2020 ஆம் ஆண்டளவில் 4 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கையின்பால் கவரும் குறியிலக்கை நிறைவு செய்வதற்கு சுத்தமான கரையோரத்தையும் கடலையும் பேணுவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, நீர் வழிகளை கழிவுகளற்று சுத்தமாக பேணுவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.