• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான 12,000 மெற்றிக்தொன் சோளத்தை பெற்றுக் கொள்வதற்கான கேள்வி
- திரிபோஷா உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பிரதான மூலப்பொருளான 12,000 மெற்றிக்தொன் சோளம் இலங்கை திரிபோஷா லிமிட்டட் நிறுவனம் சார்பில் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 670.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.KST Evergreen (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.