• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பொறிமுறை கற்கைப் பிரிவில் மோட்டார் வாகனம் மற்றும் வலுத்தொகுதி ஆய்வுகூடமொன்றை தாபித்தல்
- உள்நாட்டு மோட்டார் வாகன தொழிலில் ஏற்படும் தேவைகளுக்கு வசதிகளை வழங்குதல், நவீன முழுமையான மோட்டார் வாகன ஆய்வுகூடமொன்றை தாபித்தல், நவீன அறிவுடன்கூடிய பொறியியலாளர்களை உருவாக்குதல், மோட்டார் வாகன தொழில் துறை சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்புபட்ட ஆராய்ச்சி, அளவாய்வு மற்றும் அபிவிருத்தி ஆற்றல் என்பவற்றை நிறைவேற்றுதல் சார்பில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பொறிமுறை கற்கைப் பிரிவில் மோட்டார் வாகனம் மற்றும் வலுத்தொகுதி ஆய்வுகூடமொன்றை தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்திற்கு இலகு கடன் திட்டமொன்றாக நிதியளிப்பதற்கு ஒஸ்றியாவின் Raiffeisen Bank International AG நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த துறை தொடர்பில் செயலாற்றும் ஒஸ்றியாவில் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரே நிறுவனமான AVL List GmbH நிறுவனத்திடமிருந்து விரிவான கருத்திட்ட அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.