• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழைச்சேனை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் சிவில், இயந்திர மற்றும் மின்சாரம் சார்ந்த வேலைகளுக்கான இயந்திரம் மற்றும் வடிவமைப்பு ஒப்பந்தம்
- கோரளைப்பற்று, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று வடக்கு மற்றும் ஏறாவூர்பத்து ஆகிய ஆறு (06) பிரதேச செயலகங்களை தழுவும் விதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வாழைச்சேனை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் சிவில், இயந்திர மற்றும் மின்சாரம் சார்ந்த வேலைகளுக்கான இயந்திரம் மற்றும் வடிவமைப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s. China Geo Engineering Company Limited மற்றும் China National Aero Technology International Engineering Corporation என்பன இணைந்து தாபித்துக் கொண்டுள்ள கூட்டுத்தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.