• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
படைப்புழு காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை கட்டாய பயிர்ச்செய்கை காப்புறுதி திட்டத்தின் கீழ் ஈடுசெய்தல்
- அண்மைக்காலமாக இலங்கையின் பிரதான கமத்தொழில் பிரதேசங்களில் துரிதமாக பரவும் படைப்புழு அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகளுக்கு எதிர்பாராத பொருளாதார நட்டம் ஏற்பட்டுள்ளது. பயிர் சேதம் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள கட்டாய பயிர்ச்செய்கை காப்புறுதி திட்டத்தின் கீழ் இத்தகைய கிருமி தொற்று காரணமாக நிகழும் சேதங்களுக்கு காப்புறுதி காப்பீடுகள் கிடைக்கப் பெறாததோடு, மேலதிக காப்பீட்டின் கீழ் விவசாயிகள் சிறிய தவணைத் தொகையினைச் செலுத்தி இந்தக் காப்பீட்டினை பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. ஆயினும், 2018 / 2019 பெரும் போகத்தில் பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள விவசாயிகளில் பெரும் பகுதியினர் இந்த மேலதிக காப்பீ்ட்டினை பெற்றுக் கொள்ளாமை கவனத்திற் கொள்ளப்பட்டது. ஆதலால், படைப்புழுவினால் நிகழும் சேதத்தை கட்டாய பயிர்ச்செய்கை காப்புறுதி திட்டத்தின் கீழ் ஈடுசெய்வதற்கும் இதற்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதற்குமாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.