• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெற்றுக்கொள்ளல்.
- 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வையினை திருத்தி வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கமைவாக இறக்குமதி தீர்வை கட்டணத்தை அறவிடும் போது உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய விதத்தில் புதிய சுங்க குறியீடுகள், துணை சுங்க குறியீடுகள் மற்றும் வரி போன்றவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் சருவதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கு ஒருங்கிணைவாக நாட்டின் எரிபொருள் விலையினை சீராக்கும் போது பெற்றோல் இறக்குமதியின் போது தீர்வை வரியினை திருத்துவதற்காக வௌியிடப்பட்டுள்ள இலக்கங்கள் 2079/32, 2092/8 மற்றும் 2097/36 கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.