• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரிச்சலுகை வழங்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டத்தை திருத்துதல்
- விமானங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், வெட்டுமரங்கள், துணி இறக்குமதி மற்றும் மாடி வீட்டு அலகுகளை விற்பனை செய்தல் அடங்கலாக சில பொருட்கள் மற்றும் சேவைகள் சார்பில் அமுலிலிருந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விலக்களிப்பானது 2018 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பெறுமதிசேர்க்கப்பட்ட (திருத்த) வரி சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது. ஆயினும், இந்த துறைகளைச் சார்ந்தவர்கள் செய்துள்ள கோரிக்கைகளை பரிசீலனைச் செய்து விமானங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், வெட்டுமரங்கள், துணி இறக்குமதியின் போதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தவிட்டிலாலான எண்ணெய் மீதும் வரி விலக்களிப்பினை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் வருமானத்தை பாதுகாக்கும் நோக்கில் சில பொருட்களுக்கு அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் பெறுமதிசேர்க்கப்பட்ட வரியினை அறவிடும் அடிப்படையினை விதித்துரைப்பதற்கும் இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்தை திருத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.