• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி வசதிகளை விரிவுபடுத்துதல்
- "என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டங்களிலுள்ள சலுகை நியதிகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக இந்த கடன் திட்டத்திற்கு பாரிய கேள்வி நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் கடன் திட்டங்களினால் தழுவப்படாத சலுகை வீடமைப்பு கடன்களை எதிர்பார்க்கும் வௌிநாடுகளில் தொழில் புரிபவர்கள், சாதாரண வசு வண்டிக்கு பதிலாக நகர சொகுசு வசு வண்டிகளை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கும் தனியார் வசு வண்டி உரிமையாளர்கள், முதியோர் காப்பகங்களை நிருமாணிக்க மற்றும் விருத்தி செய்ய எண்ணும் முதலீட்டாளர்கள் மற்றும் வாடகை வாகன சேவையில் ஈடுபடுவதற்கு விரும்பும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போன்றோரையும் உள்வாங்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.