• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலிஸ் சேவையை மறுசீரமைத்தல்
- வினைத்திறன்மிக்க, பொறுப்புக்கூறும் தொழில் ரீதியிலான பொலிஸ் சேவையொன்றுக்கான பொது மக்களின் எதிர்பார்ப்பையும் நடைமுறையிலுள்ள பொலிஸ் தொடர்புபட்ட நடவடிக்கை முறைகளையும் செயலாற்றுகையையும் தற்போதைக்கு ஏற்றவாறு இற்றைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இலங்கை பொலிஸ் சேவையை மறுசீரமைப்பதற்குத் தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நிபுணர்கள் அடங்கிய பொலிஸ் சேவை மறுசீரமைப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கிணங்க இலங்கை பொலிஸ் சேவையின் தொழில் ரீதியிலான திறமைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் வௌிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், மனித உரிமைகளை நிலைநிறுத்துதல் மற்றும் பேணுதல், குற்றங்களை தடுத்தல், குற்றங்கள் தொடர்பிலான அச்சங்களை குறைத்தல், பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்குள்ள எண்ணத்தினை அதிகரித்தல், பொது மக்களின் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் என்பவற்றை மேம்படுத்தல் போன்ற துறைகளின் ஊடாக இந்தக் குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகள் உள்ளடக்கப்பட்ட பொலிஸ் சேவைக்கான மறுசீரமைப்பு செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.