• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறந்த அரசாங்க பங்குடமை இரண்டாவது தேசிய செயல்திட்டம் (2018 - 2020)
- திறந்த அரசாங்க பங்குடமை என்பது வௌிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், குடிமக்களை வலுவூட்டுதல், ஊழலுக்கெதிராக போராடுதல், மற்றும் அரசாங்க நிருவாகத்தை வினைத்திறன்மிக்கதாக்குவதற்கு புதிய தொழினுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற கொள்கைகளுக்கு அரசாங்கங்களின் கடும் அர்ப்பணிப்பினை உறுதிப்படுத்துவதனை நோக்காக கொண்ட பல்தரப்பு முன்னெடுப்பாகும். திறந்த அரசாங்க பங்குடமையின் கீழ் சகல பங்குபற்றும் நாடுகளினாலும் சுயமாகவே தயாரித்துக் கொள்ளும் இரண்டு வருட கால தேசிய செயல்திட்டத்தை தயாரித்தலானது எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் முதலாவது இரண்டு வருட திறந்த அரசாங்க பங்குடமை திட்டத்தை (2016 - 2018) நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் திறந்த அரசாங்க பங்குடமை இரண்டாவது தேசிய செயல்திட்டமானது வலது குறைந்த குடிமக்களின் உரிமைகளை மேலும் பாதுகாத்தல், சொத்துகள் வௌிப்படுத்தல் மூலம் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் சார்பில் மேம்படுத்தப்பட்ட சேவைகளை ஏற்பாடு செய்தல் போன்ற பரந்துபட்ட 14 பொறுப்புக்களையும் 61 குறியிலக்குகளையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திறந்த அரசாங்க பங்குடமை இரண்டாவது தேசிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்க பொறிமுறையில் குடிமக்களின் பங்களிப்பு மற்றும் வௌிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக இலங்கை மக்கள் சார்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க இந்த திறந்த அரசாங்க பங்குடமை இரண்டாவது தேசிய செயல்திட்டத்தை (2018 - 2020) உரிய அரசாங்க நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் இது தொடர்பிலான மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் சார்பில் அமைச்சுக்களுக்கு இடையிலான வழிநடத்தல் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.