• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை கனிம மணல் நிறுவனத்தின் கனிம மணல் விற்பனை
- அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை கனிம மணல் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கனிம மணல் விற்பனைக்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கேள்விக் குழுவினதும் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் Non - Magnetic Heavy Mineral Concentrate மெற்றிக் தொன் 40,000 மெற்றிக் தொன் ஒன்று 283.91 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதமும், Low - Grade Zircon Crude மெற்றிக் தொன் 13,000 மெற்றிக் தொன் ஒன்று 25.11 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதமும், Zircon மெற்றிக் தொன் 250 மெற்றிக் தொன் ஒன்று 1403 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதமும் M/s Alchemy Heavy Metals (Pvt.) Ltd. கம்பனிக்கும் Rutile மெற்றிக் தொன் 800 மெற்றிக் தொன் ஒன்று 1,113 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் M/s Sell & Parker Pty. Ltd. கம்பனிக்கும் Hi-Ti Ilmenite மெற்றிக் தொன் 2,000 மெற்றிக் தொன் ஒன்று 136.86 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் M/s Project Prospects (Pvt.) Ltd. கம்பனிக்கும் வழங்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.