• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி மாவட்ட செயலகத்திற்காக கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல்
- காலி நகரத்தின் கடல் வளையத்தில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை கூடுதலாக கவரும் அருகாமையிலுள்ள இடமொன்றாகவுள்ள Hall de Galle இலுள்ள மண்டபமொன்றில் அரச வைபவங்கள், மாநாடுகள், செயலமர்வுகள் என்பவற்றை காலி மாவட்ட செயலகமும் தென் மாகாணத்திலுள்ள பெரும்பாலான அரசாங்க நிறுவனங்களும் நடாத்துகின்றன. தென் மாகாணத்தில் காலி கோட்டைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவுயர்ந்த வர்த்தக பெறுமதியொன்றைக் கொண்டுள்ள இம்மனையிடமானது திட்டமிடப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி செயற்பாடுகள் கருதியும் காலி மாவட்ட செயலகத்தின் பாவனைக்காக 2,000 ஆசன கொள்ளவுடன் கூடிய புதிய கேட்போர் கூடமொன்றை வடிவமைத்து நிர்மாணித்தல் கருதியும் விடுவிக்கப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இவ் ஒப்பந்தத்தை 2,656.87 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Sanken Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.