• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேருவளை ஆதார வைத்தியசாலையின் பிரதான கட்டடத்தை (கட்டம் - I) நிருமாணித்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, பேருவளை ஆதார வைத்தியசாலையின் ஒன்பது மாடி பிரதான கட்டடத்தின் நிலக்கால் அத்திபாரத்தை (கட்டம் - I) நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 355 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Access Engineering PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.