• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் 20 அரசாங்க வைத்தியசாலைகளுக்கு படம் காப்பக மற்றும் தொடர்பாடல் முறைமையொன்றையும் / கதிரியக்கவியல் தகவல் முறைமையொன்றையும் தாபித்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, நோயாளிகளின் சகல தகவல்களையும் பாதுகாத்து களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், குறைவான நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கும் அதேவேளை டிஜிட்டல் கதிரியக்க உருவப்படங்களை பெருப்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் சிகிச்சைகளை வழங்குவதற்காக துல்லியமான நோய் கண்டறிதலுக்கு உதவுவதற்கும் இலங்கையில் 20 அரசாங்க வைத்தியசாலைகளுக்கு படம் காப்பக தொடர்பாடல் முறைமையொன்றையும் / கதிரியக்கவியல் தகவல் முறைமையொன்றையும் தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை மலேசியாவிலுள்ள M/s REDtone MEX sdn Bhd நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.