• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலும்மஹர பிரதேசத்தில் 1,500 கன மீற்றர் கொள்ளவுடைய நீர்த்தாங்கி கோபுரமொன்றை நிருமாணித்தலும் நீர் குழாய்களை பதித்தலும் பரிமாற்றல் மற்றும் விநியோக தொகுதி சார்பில் தேவையான கருவிகளுக்குமான கொள்வனவு
- கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் ஒப்பந்தம் M/s China Machinery Engineering Corporation நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதோடு, அதன் சில பணிகள் 08 துணை ஒப்பந்தங்களின் கீழ் செய்வதற்கு உடன்பாடு காணப்பட்டது. இதற்கமைவாக அதன் ஒரு துணை ஒப்பந்தமான பலும்மஹர பிரதேசத்தில் 1,500 கன மீற்றர் கொள்ளவுடைய நீர்த்தாங்கி கோபுரமொன்றை நிருமாணித்தல், நீர் குழாய்களை பதித்தல், பரிமாற்றல் மற்றும் விநியோக தொகுதி சார்பில் தேவையான கருவிகள் என்பவற்றிற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Sanken Construction (Pvt.) Ltd நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.