• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கீழ் அத்தனகல்ல பிரதேசத்தில் பிரதான அனுப்பீடு குழாய் மற்றும் நீர் விநியோகத்திற்குத் தேவையான குழாய் என்பவற்றை பதிப்பதற்கும் கருவிகளுக்குமான கொள்வனவு
- கம்பஹ, அத்தனகல்ல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் ஒப்பந்தம் M/s China Machinery Engineering Corporation நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதோடு, அதன் சில பணிகள் துணை ஒப்பந்தங்களின் கீழ் செய்யப்படவிருந்தது. இதன் கீழ் அத்தனகல்ல பிரதேசத்தில் 1,500 கன மீற்றர் கொள்ளவு கொண்ட நீர் தாங்கி கோபுரமொன்றை நிருமாணித்தல், அனுப்பீடு மற்றும் விநியோகம் என்பன பொருட்டிலான பிரதான குழாய்க்குத் தேவையான கருவிகளையும் நீர் குழாய்களையும் பதிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s Sierra Construction Limited மற்றும் K D A Weerasinghe Co. (Pvt.) Limited ஆகிய கூட்டுத் தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.