• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மற்றும் கம்பஹா தொழில்பயிற்சி நிலையங்களை நவீனமயப்படுத்துதல்
- கொழும்பு தொழில்பயிற்சி நிலையத்தை தாபித்தல் மற்றும் கம்பஹா தொழினுட்பக் கல்லூரியை அபிவிருத்தி செய்தல் என்பதன் கீழ் உரிய நிருமாணிப்பு பணிகள் முடிவடைந்து வருகின்றன. இந்த தொழிநுட்ப கல்லூரிகளிலுள்ள பாடநெறிகள் தேசிய தொழிற்தகைமை (NVQ) 4 இலிருந்து 5 ஆம் 6 ஆம் மட்டங்கள் வரை தரமுயர்த்தப்பட்டுள்ளமையினால் இந்த தேவைகளுக்கு ஏற்றவாறும் நவீன தொழிநுட்ப மாற்றங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இதற்கு முன்னர் பிரேரிக்கப்பட்டிருந்த இயந்திரசாதன பட்டியலை திருத்துவதற்காக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.