• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பலாங்கொடை பொல்வத்தை ஆயுள்வேத வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
- அம்பலாங்கொடை பொல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுள்வேத வைத்தியசாலையானது 18 படுக்கைகளையும் 02 காவறைகளையும் கொண்டு வதிவிட நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கி வருகின்றது. மாதாந்தம் சுமார் 3,000 நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக இந்த வைத்தியசாலைக்கு வருகைதந்தாலும் போதியளவு வசதிகள் இல்லாததன் காரணமாக இந்த நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளிப்பது கடினமாய் அமைந்துள்ளது.
புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய் கட்டுப்பாட்டிற்கும் அதேபோன்று குணமடைவதற்கும் யோகா சிகிச்சைப் பிரிவின் மூலம் வழங்கக்கூடிய பங்களிப்பினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை 04 கட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள் முடிவடைந்து வருகின்றதோடு இதன் இரண்டாம் மூன்றாம் கட்டங்களாக 1 ஆம் 2 ஆம் மாடிகளுக்கான பணிகளும் நான்காம் கட்டத்தின் கீழ் 3 ஆம் மாடிக்கான பணிகளும் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக்கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.