• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis முறைமையைப் பயன்படுத்தி 'வீட்டிலேயே இரத்த சுத்திகரிப்பு முறைமையினை' அறிமுகம் செய்யும் கருத்திட்டம்
- சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis முறைமையைப் பயன்படுத்தி 'வீட்டிலேயே இரத்த சுத்திகரிப்பு முறைமையினை' அறிமுகம் செய்யும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பிரேரிப்பொன்று அமைச்சரவைக்கு இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த பிரேரிப்பை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக, உத்தேச கருத்திட்டத்தை மதிப்பிடுவதற்கும் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்குமாக தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவொன்றையும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த கருத்திட்டத்தை முன்னோடி கருத்திட்டமொன்றாக இந்த நோய் பெறுமளவிலுள்ள மாவட்டங்களில் 500 நோயாளிகளிடம் செயற்படுத்தி அதன் பின்னர் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த உபகுழுவானது சிபாரிசு செய்துள்ளது. சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சிபாரிசுகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.