• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் பருத்தித்துறை மற்றும் மாங்குளம் தள வைத்தியசாலைகளிலும் சுகாதார சேவை வசதிகளை விருத்தி செய்தல்
- வட மாகாணத்தில் சுகாதார வசதிகளையும் சேவைகளையும் விருத்தி செய்வதன் கீழ் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் பருத்தித்துறை மற்றும் மாங்குளம் தள வைத்தியசாலைகளிலும் சுகாதார சேவை வசதிகளை விருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட செலவானது 54.45 மில்லியன் யூரோக்கள் ஆவதோடு இந்த முதலீட்டில் 75 சதவீதம் ஏற்றுமதி கடன் முகவர் நிறுவனமொன்றின் காப்பீ்ட்டுடன் கடன் வசதியினை வழங்குவதற்கு நெதர்லாந்து ING Bank N.V நிறுவனத்தின் மூலமும் மீதி 25 சதவீதம் கொண்ட தொகையானது நெதர்லாந்து அரசாங்கத்தின் கொடையொன்றாகவும் வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை வட மாகாண சபையின் ஒத்துழைப்புடன் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.