• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- கடந்த நாட்களில் வடகீழ் பருவக்காற்றின் தூண்டலினால் இத்தீவைப் பாதித்த தீவிரமான காலநிலைமை காரணமாக, வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 39,895 குடும்பங்களில் 123,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 474 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ள அதேநேரம் 4,522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. முறையான மதிப்பீட்டின் பின்னரான உரிய இழப்பீடொன்று கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் வரை, அவசரமாக செய்யப்படுவதற்குத் தேவைப்படும் அவசியமான புனரமைப்புக்களையும் துப்பரவாக்கத்தையும் செய்யும் பொருட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு 10,000/- ரூபா முற்பணமொன்றை வழங்குவதற்கென தேவைப்படும் நிதியங்களும் பொருட்களும் மாவட்டச் செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இதனையொத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பும் வரை அவர்களுக்கு இரு (02) வார காலப்பகுதியொன்றுக்கு உலர் உணவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, சேதமுற்ற உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுக் கட்டங்களின் புனரமைப்புகளை மேற்கொள்வதற்கும் அத்துடன் விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் சார்பிலும், கூறப்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிவாரணத்தை வழங்குவதற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.