• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2017 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 2018‑07‑11 ஆம் திகதியைக் கொண்ட 2079/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், உற்நாட்டு கைத்தொழில் உற்பத்தி செய்முறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் இனங்காணப்பட்ட உயர் தொழினுட்ப மற்றும் தன்னியக்க இயந்திர சாதனம் தொடர்பில் செலுத்த வேண்டிய துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டின் 75 சதவீத கைவிடுதலை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டது. அதற்கிணங்க உரிய வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.