• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டு சட்டத்தின் கீழ் காலத்திற்கு காலம் பிரசுரிக்கப்படும் வர்த்தமானி அறிவித்தல்கள் சார்பில் தீர்மானமொன்றை அங்கீகரிப்பதன் மூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்கிணங்க, நுகர்வோருக்கும் உள்நாட்டு விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்கும் நோக்குடன், அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டு ஆனால் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் இதுவரை முன்வைக்கப்பட்டாத 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டு சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 08 வர்த்தமானி அறிவித்தல்களையும் அத்துடன் அதே 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டு சட்டத்தின் கீழ் நுகர்வோருக்கும் உள்ளூர் விவசாயிகளுக்கும் சலுகை அளிப்பதற்காக பிரசுரிக்கப்பட்ட இன்னுமொரு 07 வர்த்தமானி அறிவித்தல்களையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் மீளச் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.